இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்திய 113 கிலோ கேரள கஞ்சா மீட்பு

கேரள கஞ்சா

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்திவரப்பட்ட 113 கிலோ கேரள கஞ்சா கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

யாழ் வடமராட்சி கிழக்கு கடற்பகுதியூடாக இலங்கைக்கு கடத்தவிருந்த 113 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்

நேற்று இரவு 8:00 மணியளவில் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் சந்தேகத்திற்கு இடமான முறையில் காணப்பட்ட பொதி ஒன்றினை கைப்பற்றியிருந்தனர்.

இதன் போது கடல் நீர் உள்ளே செல்லாதவாறு மிகவும் நுனுக்காமான முறையில் பொதி செய்யப்பட்ட கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன் பெறுமதி 1கோடியே 16 இலட்சம் ரூபா என கணக்கிடப்பட்டுள்ளது.

இளவாலை மற்றும் வல்வெட்டித்துறை கடற்பரப்பு ஊடாக அன்மைக்காலமாக கஞ்சா கடத்தல் அதிகரித்து வந்த நிலையில் தற்போது பொலிஸாரின் ரோந்து பணி அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கஞ்சா கடத்தல் நபர்கள் வடமராட்சி கிழக்கு பகுதியூடாக கஞ்சா கடத்தும் நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கஞ்சா காங்கேசன்துறை கடற்படை தளத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன் யாழ் காங்கேசன்துறை பொலிசாரிடம் அது ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]