முகப்பு News இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியை கைப்பற்றியது இங்கிலாந்து

இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியை கைப்பற்றியது இங்கிலாந்து

இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இதன் மூலம், 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என இங்கிலாந்து அணி கைப்பற்றியது.

இங்கிலாந்து மற்றும் இந்தியாவிற்கு இடையிலான 4 ஆவது டெஸ்ட் சவுத்தம்ப்டனில் நடைபெற்று வருகிறது.

முதலில் பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்சில் 246 ஓட்டங்கள் மாத்திரம் பெற்றுக்கொண்டது. இதன் பின்னர் தனது முதல் இன்னிங்சில் களமிறங்கிய இந்தியா 273 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இந்நிலையில் தனது 2 ஆம் இன்னிங்ஸில் 27 ஓட்டங்கள் பின்னிலையில் ஆரம்பித்த இங்கிலாந்து 271 ஓட்டங்களுக்குள் சுருண்டது. இதனையடுத்து 244 என்ற வெற்றி இலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா சகல விக்கெட்களையும் இழந்து 184 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இதில் அணித்தலைவர் விராட் கோஹ்லி 58 மற்றும் ரஹானே 51 ஓட்டங்களை அதிகமாக பெற்றுக்கொண்டனர்.

மேலும் இங்கிலாந்து சார்பில் மொகீன் அலி 4 விக்கெட்களையும், ஆண்டர்சன் மற்றும் ஸ்டோக்ஸ் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து, இங்கிலாந்து அணி 60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதோடு, இதன் மூலம் டெஸ்ட் தொடரை இந்தியா அணி இழந்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com