முகப்பு News Local News இந்தியாவின் 72வது சுதந்திரதினம் யாழில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது

இந்தியாவின் 72வது சுதந்திரதினம் யாழில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது

இந்தியாவின் 72வது சுதந்திரதினம் யாழில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
யாழ் கச்சேரி நல்லூர் வீதியிலுள்ள “இந்திய இல்லத்தில்” இன்று (15) காலை 9.00 மணியளவில் இலங்கைகான இந்திய துணைத்தூதுவர் சங்கர் பாலசந்திரன் தேசிய கொடியினை ஏற்றிவைத்து மரியாலை செலுத்தினார்.

அத்துடன் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் சுதந்திரதின உரையினை உயர்ஸ்தானிகர் வாசித்ததுடன் வடக்கில் இந்திய அரசாங்கம் மேற்கொண்டுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் உரையாற்றினார்.

இந்நிகழ்வில், மதகுருமார்கள், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கன் வேதநாயகன்இவடமாகாண ஆளுனரின் செயலாளர் இ.இளங்கோவன்இவடமாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன் யாழ் பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் ஆர்.விக்னேஸ்வரன் உள்ளிட்ட பலர் அரச உத்திழயோகத்தர்கள், பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com