இந்தியாவின் 11 மாநிலங்களுக்கு ஒரே சமயத்தில் தேர்தல்

இந்தியாவின் 11 மாநிலங்களுக்கு ஒரே சமயத்தில் தேர்தலை நடத்துவதற்கு பாரதியே ஜனதா கட்சி அரசாங்கம் ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த கட்சியின் உயர் மட்டத தகவல்களை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது.

2019ம் ஆண்டு முதல் காலாண்டில் மத்திய பிரதேஸ், சட்டிஸ்கார் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் ஆட்சிக் காலம் நிறைவடைகின்றது.

அதேபோன்று, மிசோரம் மாநில ஆட்சிக் காலம் இந்த ஆண்டு டிசம்பருடன் நிறைவடைகிறது.

ஹரியானா, ஜார்காண்ட் மற்றும் மஹாராஷ்ட்டிரா ஆகிய மாநிலங்களின் ஆட்சி பாரதிய ஜனதா கட்சியிடமே உள்ளன.

இந்தநிலையில் குறித்த மாநிலங்களுடன் தெலுங்கானா, ஆந்திர பிரதேஸ் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவதற்கு ஆலோசிக்கப்படுகிறது.

அத்துடன் அதற்கு சமாந்தரமாக லோக்சபா தேர்தலையும் நடத்த உத்தேசிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]