முகப்பு News India இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்!

உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், சற்றுமுன்னர் காலமானார்.

கடந்த 9வாரங்களாக உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று (வியாழக்கிழமை) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக குறித்த மருத்துவமனை அறிவித்துள்ளது.

மேலும் பிரதமர் வாஜ்பாய் உடல் நிலை கவலைக்கிடமாக காணப்பட்ட நிலையில், உயிர்காக்கும் உபகரணங்கள் கொண்டு வாஜ்பாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக எய்ம்ஸ் மருத்துவமனை புதிய அறிக்கையில் தெரிவித்திருந்த நிலையில், இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com