முகப்பு News India இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் நிலை கவலைகிடம்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் நிலை கவலைகிடம்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் நிலை கவலைகிடம்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக, டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனை இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேலும் உயிர்காக்கும் கருவிகள் மூலம் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனை தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் வாஜ்பாய் வீடு அமைந்துள்ள பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, பா.ஜ.க-வின் அனைத்து நிகழ்ச்சிகளும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

அத்தோடு வாஜ்பாயின் உடல் நிலை குறித்து இந்திய பிரதமர் மோடி மற்றும் மூத்த அமைச்சர்கள் மருத்துவமனைக்கு சென்று விசாரித்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

மேலும் வாஜ்பாய் நலம் பெற வேண்டி பல்வேறு பகுதிகளில் பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, பல்வேறு தலைவர்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் பிரார்த்தனைகளை வெளியிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com