முகப்பு News India இந்தியாவின் கேரள மாநிலத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 2 லட்சம் பேர் இடம்பெயர்வு

இந்தியாவின் கேரள மாநிலத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 2 லட்சம் பேர் இடம்பெயர்வு

இந்தியாவின் கேரள மாநிலத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 2 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட பாரிய வெள்ளம் காரணமாக மரணித்தவர்களின் எண்ணிக்கை 324 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 100 ஆண்டு காலப்பகுதியினில் கேரளா எதிர்நோக்கும் பாரிய வானிலை வெள்ளப் பெருக்கு இதுவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெள்ள அனர்த்தம் காரணமாக அங்குள்ள நீர்த்தேக்கங்களில் 80 நீர்த்தேக்கங்கள் திறந்து விடப்பட்டுள்ளன.

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட 2 லட்சத்து 23 ஆயிரத்து 139 பேர் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கேரள முதலமைச்சர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், கடற்படை, இராணுவம், கடலோர பாதுகாப்பு மற்றும் தேசிய அனர்த்த நிவாரணப் படை ஆகியவற்றைச் சேர்ந்த நூற்றுக்கு அதிகமான குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com