இந்தியாவின் அணித்தலைவராவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை- கோஹ்லி

இந்தியாவின் அணித்தலைவராவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை- கோஹ்லி 

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் விராட் கோஹ்லி புனேயில் நேற்று அளித்த ஒரு பேட்டியில், அனைத்துவகையான (டெஸ்ட், ஒரு நாள் மற்றும் ,T20 போட்டி) கிரிக்கெட்டுக்கும் இந்திய அணியின் தலைவராக  நியமிக்கப்பட்டிருப்பதை உண்மையிலேயே நம்ப முடியவில்லை.

எனது வாழ்க்கையில் இப்படியொரு நாள் வரும் என்று ஒரு போதும் நினைத்ததில்லை என்றும் கோஹ்லி குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அணிக்குள் நுழைந்த போது, சிறப்பாக விளையாடி மென்மேலும் வாய்ப்புகளை பெற வேண்டும், தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றியில் முக்கிய பங்களிப்பை அளிக்க வேண்டும் என்பது மட்டுமே நோக்கமாக இருந்தது.

ஆனால் இப்போது இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக நான் நியமிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியே என்றும் கோஹ்லி குறிப்பிட்டுள்ளார்.

ஒருநாள், T20 போட்டிகளுக்கான அணித்தலைமையில் இருந்து டோனி விலகியுள்ள நிலையில், கோஹ்லி தலைவராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.