இந்தியன் 2 பட கூட்டணியில் இணையும் அனிருத்!..

உலக நாயகன் கமல் நடிப்பில் வெளியான வெற்றிப்படம் இந்தியன். தற்போது இந்தியன் 2 பட வேலைகளை இயக்குனர் ஷங்கர் ஆரம்பித்துள்ளார். இப்படத்தில் கமல் நடிப்பது உறுதியாகியுள்ளது.

கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கவுள்ளார். தற்போது இந்த படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தமாகியுள்ளார். ரஜினியின் ‘பேட்ட’ படத்தை தொடர்ந்து கமலுடன் இணைந்து ‘இந்தியன் 2’ படத்திற்கும் இசையமைக்கவுள்ளார் இவர்.

இந்தியன் படத்திற்கு பிறகு ஷங்கர் – கமல் கூட்டணி இணையும் படம் இந்தியன் 2 என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியன் 2

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]