இந்தியன் 2’ என்று எழுதப்பட்டிருக்கும் ஹீலியம் பலூன் தைவான் நாட்டில்

இந்தியன் 2 தைவான்

விக்ரமின் ‘ஐ’ படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘2.0’. ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து ஷங்கர் ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவுள்ளார்.

1996-ஆம் ஆண்டு ரிலீஸான இதன் முதல் பாகத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்தி அசத்தியிருந்தார். முதல் பாகம் மெகா ஹிட் என்பதால் இப்போதே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இதிலும் கமல்ஹாசனே ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது.

தற்போது, இயக்குனர் ஷங்கர் டிவிட்டரில் ‘இந்தியன் 2’ என்று எழுதப்பட்டிருக்கும் ஹீலியம் பலூனை தைவான் நாட்டில் தனது டீமுடம் பறக்கவிட்ட வீடியோவையும் பதிவு செய்துள்ளார். இவ்வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. படத்தின் ஷூட்டிங்கை வருகிற மார்ச் மாதம் துவங்கவுள்ளனர். மொத்த படப்பிடிப்பையும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் அரம்பமே அதளமாக இருக்கிறது என்று பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]