இந்தவாரம் இரண்டு மாதிரிக் கிராமங்கள் மக்களிடம் கையளிப்பு

பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மகாதேவி கிராமம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் திறந்துவைக்கப்படவுள்ளது.

‘அனைவருக்கும் நிழல்’ என்ற வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள மேலும் இரண்டு மாதிரிக் கிராமங்கள் இந்த வாரம் திறந்து வைக்கப்படவுள்ளது.

குருநாகலில் அமைக்கப்பட்டுள்ள விஜயபாகம கிராமம் அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்வரும் புதன்கிழமை மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளது.
குருநாகல் விஜயபாகம கிராமத்தில் 18 வீடுகள் அமைந்துள்ளன. திறப்பு விழாவின் போது 200 இளைஞர்களுக்கு ‘சில்ப-சவிய’ திட்டத்தின் கீழ் நிர்மாணத்துறை உபகரணங்கள் வழங்கி வைக்கப்படவுள்ளது.

பொலன்னறுவை மகாதேவி கிராமம் 29 கிராமங்களை உள்ளடக்கியதாகும். மிகவும் பின்தங்கிய பிரதேசத்தில் அமைந்துள்ள இந்த எழுச்சிக் கிராமம் வீட்டு பயனாளிகளின் குடும்பங்கள் வழங்கிய ஒத்துழைப்புடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளும் அதிகார சபையினால் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. மூன்று இலட்சம் ரூபா கடனுதவி இந்த வீடுகளை அமைப்பதற்கு வழங்கப்பட்டிருப்பதாக வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் சாகர பலன்சூரிய தெரிவித்துள்ளார்.