இந்தமுறை வரவு செலவு திட்டத்தில் சில விடயங்களை அரசாங்கம் பொதுமக்களிடம் இருட்டடிப்பு – மஹிந்த

இந்தமுறை வரவு செலவு திட்டத்தில் சில விடயங்களை அரசாங்கம் பொதுமக்களிடம் இருட்டடிப்பு – மஹிந்த

இந்தமுறை வரவு செலவு திட்டத்தில் சில விடயங்களை அரசாங்கம் பொதுமக்களிடம் இருந்து மறைத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

அனுராதபுரம் – கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டார்.

புதிய அரசியலமைப்பு திருத்தத்தை தேலையேற்படின் திருத்தங்களுக்கு உட்படுத்த முடியும், உறுதிமொழிகளை நிறைவேற்றாது வழங்காத உறுதிமொழிகளை நல்லாட்சி அரசாங்கம் நிறைவேற்றி வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

இந்தமுறை வரவு செலவு திட்டத்தின் சுவையை 18 வயதுக்கு மேற்பட்டவர்களாக வரிச்சுமையை சுமக்கக் கூடியவர்களே சுவைக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.

பொருட்களின் விலைகள் மிகவும் உயர்ந்த அளவில் உள்ளதாகவும், விவசாயிகளுக்கு தமது உற்பத்திகளை விநியோகிக்க முடியாத நிலை தோன்றியிருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி குற்றம்சுமத்தினார்.

இந்தநிலையில் நாட்டில் படிப்படியாக மோசடி வலையமைப்பு ஒன்று தோற்றம் பெற்றுள்ளதாகவும் , சட்டம் முறைகெட்டு இருப்பதாகவும், பொதுமக்களின் வாழ்க்கை அழுத்தம் நிறைந்ததாகவும் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]