இந்­தி­யா இரா­ணு­வத் தேவைகளுக்கு மத்தல விமான நிலை­யத்தை பாவிக்க முடியாது

மத்தல விமான நிலை­யத்தை இரா­ணு­வத் தேவை­க­ளுக்­குப் பயன்­ப­டுத்­தக் கூடாது என்ற முக்­கி­ய­மான நிபந்­த­னையை இந்­தி­யா­வி­டம் இலங்கை முன்­வைத்­துள்­ள­தாகத் தெரி­விக்­கப்­­படு­கி­றது.

மத்தல விமான நிலை­யத்தை
Mattala Airport

மத்­தல விமான நிலை­யத்தை இந்­திய நிறு­வ­னத்­துக்குக் குத்­தகை அடிப்­ப­டை­யில் வழங்­கும் கூட்டு முயற்சி உடன்­பாட்­டைச் செய்து கொள்­வ­தற்­கான பேச்­சுக்­கள், இரண்டு நாடு­க­ளுக்­கும் இடை­யில் நடத்­தப்­பட்டு வரு­கின்­றன.

மத்­தல விமான நிலை­யம் தொடர்­பாக இந்­தி­யா­வு­டன் செய்து கொள்­ளத் திட்­ட­மி­டப்­ பட்­டுள்ள உடன்­பாட்­டில், இந்த வானூர்தி நிலை­யத்தை இரா­ணு­வத் தேவை­க­ளுக்­குப் பயன்­ப­டுத்­தக் கூடாது என்ற நிபந்­தனை உள்­ள­டக்­கப்­பட்­டி­ருக்­கும் என்று சிவில் வானூர்­திப் போக்­கு­வ­ரத்து அமைச்­சின் செய­லர் நிகால் சோம­வீர தெரி­வித்­துள்­ளார்.

விமான போக்­கு­வ­ரத்துக் கட்­டுப்­பாட்­டுக் கோபு­ரத்­தை­யும் இ­லங்­கையே நிர்­வ­கிக்­கும். மத்­தல விமான நிலை­யத்­தின் 70 வீத உரி­மையைத் தமக்கு வழங்­கு­மாறு இந்­தியா கேட்­டுக் கொண்­டுள்­ளது.

எனி­னும், தமக்குக் கூட்டு முயற்சி நிறு­வ­னத்­தில் 40 வீத உரிமை இருக்க வேண்­டும் என்று அரசு வலி­யு­றுத்­தி­யுள்­ள­தா­க­வும், நிகால் சோம­வீர குறிப்­பிட்­டார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]