இத்தாலி – வத்திக்கான் நகரில் சிகரெட்டுகள் விற்பனை செய்ய தடை

இத்தாலி – வத்திக்கான் நகரில் சிகரெட்டுகள் விற்பனை செய்ய தடை

இத்தாலி, வத்திக்கான் நகரில் சிகரட் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

புனித பாப்பரசர் திடீர் என இந்த தடையை விதித்துள்ளார்.

புனித நகரமான வத்திக்கானில் வாழும் மக்களின் உடல்நலம் பாதிக்க ஒருபோதும் அனுமதிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

பாப்பரசரின் ஆளுமைக்கு உட்பட்ட வத்திக்கான் நகரம் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புனித தலமாக திகழ்வதுடன் நாளாந்தம் லட்சக்கணக்கானவர்கள் அங்கு செல்கின்றனர்.

சிகரட் தடை காரணமாக வருடாந்தரம் வத்திக்கான் சுமார் 175 கோடி ரூபாவினை இழக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ஐக்கிய நாடுகளின் உலக சுகாதார அமைப்பினால் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையில், புகை பிடிப்பதன் காரணமாக சர்வதேச ரீதியாக வருடாந்தரம் 70 லட்சம் பேர் மரணிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.