இத்தாலியில் பாலம் இடிந்து வீழ்ந்ததில் 43பேர் உயிரிழப்பு

இத்தாலியில் பாலம் இடிந்து வீழ்ந்ததில் 43பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த கோரச் சம்பவமானது, இத்தாலியின் வடமேற்கு பகுதியான ஜெனோவா பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மீட்பு பணியாளர்கள் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருதோடு, குறித்த பகுதியில் தீயணைப்பு படையினர் தொடர்ந்தும் பணியில் ஈடுபட்டு வரும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

மிக நெரிசலான போக்குவரத்து பாதையாக இருந்த மொரன்டி பாலத்தின் ஒரு பகுதி உடைந்து வீழ்ந்த நிலையில், பல வாகனங்கள் 45 மீட்டர் உயரத்திலிருந்து வீழ்ந்து நொருங்கியமை குறிப்பிடத்தக்கது.

இந்த அசம்பாவிதம் இத்தாலியின் கட்டுமானத்துறை தொடர்பாக கடுமையான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, விபத்தின் போது உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு பாலத்தின் நிர்மாணத்தை மேற்கொண்ட நிறுவனம் நட்டஈடுகளை வழங்க ஏற்பாடு செய்துள்ளது.

அதேவேளை, அனர்த்தம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக அரசாங்கம் விசேட ஆணைக்குழுவொன்றையும் நியமித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இத்தாலியில் பாலம் இத்தாலியில் பாலம் இத்தாலியில் பாலம் இத்தாலியில் பாலம் இத்தாலியில் பாலம் இத்தாலியில் பாலம் இத்தாலியில் பாலம் இத்தாலியில் பாலம்

 

 

 

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]