இதொ.கவின் இரண்டு உறுப்பினர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இரண்டு உறுப்பினர்கள் பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்சவுக்கு தமது ஆதரவை தெரிவிப்பதாக அந்தக் கட்சியின் ஆலோசகர் முத்துசிவலிங்கம் இதனைக் கூறியுள்ளார்.

அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி பிரதமர் ரணிலுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக இன்று காலை அறிவித்துள்ளது.

தமிழ் முற்போக்கு கூட்டணியில் 6 ஆசனங்கள் இருக்கின்ற நிலையில் தமது ஆதரவை தொடர்ந்து பிரதமர் ரணிலுக்கு வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தனது ஆதரவை பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]