இது சிங்கள பௌத்த நாடு என்று கருதி செயற்பட வேண்டும் : மனோவுக்கும் பொதுபலசேனாவுக்கும் வாக்குவாதம்

இது சிங்கள பௌத்த நாடு என்று கருதி செயற்பட வேண்டும். பௌத்த மக்களுக்கு உள்ள பிரச்சினைகளை தேசிய சகவாழ்வு அமைச்சர் மனோகணேசன் கண்டுகொள்ள வேண்டும். இது பௌத்த நாடு என்பதை கருத்திற் கொண்டு செயற்பட்டால்தால் இங்கு நல்லிணக்கம் ஏற்படும் என்று இன்று தேசிய சகவாழ்வு மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரிடம் பொதுபல சேனா அமைப்பு எடுத்துரைத்துள்ளது.   இலங்கையில் பௌத்தர்களுக்கு அநீதி ஏற்பட்டுள்ளதாக கோரி அறிக்கையொன்றை இன்று காலை தேசிய சகவாழ்வு அமைச்சுக்கு சமர்பிக்க வந்த பொதுபலசேன, சிங்கள ராவய மற்றும் சிங்கலே அமைப்புகள் அமைச்சின் நுழைவாயில் பூட்டப்பட்டிருந்ததால் சற்று பதற்றம் அடைந்தன.

என்றாலும், பின்னர் அமைச்சர் வருகை தந்ததையடுத்து இருதரப்புக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது.
சந்திப்பின் போதும், இலங்கையில் சிங்கள பௌத்தர்களுக்கு எதிராக பாரிய அநீதிகள் இழைக்கப்பட்டு வருகின்றன. பௌத்த மதத்திற்கு உரிய இடம் இல்லாதொழிக்கப்பட்டு வருகின்றது. நீங்கள் எந்த விடயம் தொடர்பில் அக்கரையின்றி செயற்படுகின்றீர்கள். எனவே, நீங்கள் இந்த பதவியில் இருந்து இராஜநாம செய்ய வேண்டும் என்று பொதுபல சேனா அமைப்பின் தலைவர் ஞானசார தேரர் வலியுறுத்தினார். அத்துடன், கிழக்கில் முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள் சேர்ந்து பௌத்தர்களின் பாரம்பரியத்தை அழிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் மனோகணேசன்,
நீங்கள் கூறுவது போன்று பௌத்த மதத்திற்கான முன்னுரிமை ஒருபோதும் இலங்கையில் இல்லாதொழிக்கப்பட போவதில்லை. புதிய அரசமைப்பிலும் பௌத்த மதத்திற்கே முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இது சிங்கள நாடு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது பல்லின மக்கள் வாழும் நாடு. நான் இந்த அமைச்சுக்கு பொறுப்பானவன் தான் என்ற அடிப்படையில்தான் ஜனாதிபதி எனக்கு இந்தப் பதவியை கொடுத்துள்ளார் எனக் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]