முகப்பு Kisu Kisu - UT Gossip இதுவரை இல்லாத கவர்ச்சியில் நடிகை த்ரிஷா- புகைப்படம் உள்ளே

இதுவரை இல்லாத கவர்ச்சியில் நடிகை த்ரிஷா- புகைப்படம் உள்ளே

நடிகை த்ரிஷா நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் கடந்த இரண்டு வருடங்களாக எந்த படமும் ரிலீசாகவில்லை. கடந்த வருடம் மலையாளத்தில் வெளியான “Hey Jude” திரைப்படம் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

தொடர் தோல்விகளால் துவண்டு கிடந்த திரிஷாவிற்கு இது புதிய உத்வேகம் அளித்துள்ளது. இந்நிலையில், இயக்குனர் பாலாவிடன் பணியாற்றிய துணை இயக்குனர் வெர்னிக் என்பவர் இயக்குனராக அவதாரமெடுக்கும் படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் திரிஷா.

1980-களில் நடக்கும் கதை என்பதால் உடல் எடையை ஏற்றி கொளுக்கு மொளுக்கு லுக்-கிற்கு மாறவுள்ளார் திரிஷா. கடந்த சில மாதங்களில் கணிசமாக எடை குறைத்து ஒல்லிப்பிச்சான் போல காட்சியளித்து வரும் இவர் தற்போது மெல்ல மெல்ல உடல் எடை ஏற்றும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இறுதியாக, கடந்த 2016-ம் ஆண்டு வெளியான அரண்மனை 2 படத்தில் படு கிளாமரான பிகினி உடைகளை அணிந்து கொண்டு கவர்ச்சி காட்டினார் அம்மணி. இந்நிலையில், இவர் நடிப்பில் உருவாகி நீண்ட நாட்களாக கிடப்பில் போடபட்ட மோகினி திரைப்படத்தில் கூடுதாக சில கவர்ச்சி காட்சிகளை ஷூட் செய்து ஓட்ட வைத்துள்ளார்களாம்.

இதுவரை படங்களில் பார்த்திடாத கவர்ச்சியை இந்த படத்தில் பார்க்கலாம் என்றும், கண்டிப்பாக முந்தைய படங்களை விட இந்த படத்தில் இன்னும் இளமையாக தெரிவார் த்ரிஷா என்றும் கூறுகிறார்கள் படக்குழுவிற்கு நெருங்கிய வட்டாரங்கள்.


Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com