இதுக்கெல்லாமா குழந்தைய கடத்துவாங்க? வவுனியாவில் கடத்தப்பட்ட குழந்தை தொடர்பில் வெளியான புதுத் தகவல்

வவுனியாவில் குட்செட் பகுதியில் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட 8 மாத குழந்தை, புதுக்குடியிருப்பு பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.

அத்துடன் பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா குட்செட் பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து கடத்திச் செல்லப்பட்ட 8 மாத குழந்தையை தாமே கடத்திச் சென்றதாக, வவுனியா பொலிஸாருக்கு குழந்தையின் தந்தை தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார்.

இதுக்கெல்லாமா குழந்தைய இதுக்கெல்லாமா குழந்தைய

குழந்தையின் தாய் தனது குழந்தையை தொலைபேசி மூலம் காண்பிக்க மறுத்ததன் காரணமாகவே தான் குழந்தையை கடத்த நேரிட்டது என்றும் அவர் தெரிவித்திருந்தார் என்று கூறப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]