இதில் உங்களுக்கு பிடித்த பழத்தை தேர்வு செய்யுங்க- உங்களை பற்றி நாங்க சொல்லுறம்!!

நாம் ஒருவர் பிறந்த நேரத்தின் படி ராசி, நட்சத்திரங்களை கணக்கிட்டு அவரது எதிர்காலத்தை கணிப்பது போல மேலை நாட்டில் இப்பொழுது பரபரப்பாக உலவி வருவது பழ ஜோசியம்.

ஒருவருக்கு மிகவும் பிடித்தமான பழங்களைக் கொண்டு அவர்களுடைய குணத்தை எதிர்காலத்தை கண்டறியலாம்.

மாம்பழம்

தொடர்புடைய படம்

மாம்பழப்பிரியரா நீங்கள்? அப்படியானால்…. நீங்கள் எடுக்கும் முடிவுகளில் உறுதியாக இருப்பீர்கள். உங்கள் மனம் மாற்றுவது என்பது மிகவும் கடினமானது. எல்லாரையும் உங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்க முயல்வீர்கள். க்ரியேட்டிவான விஷயங்களை அசால்ட்டாக கடந்து போகக்கூடியவர்கள் நீங்கள்.

பப்பாளி

பப்பாளி க்கான பட முடிவு

உங்கள் மனத்தினை ஏதாவது ஒரு காரியத்தில் ஈடுபடுத்தினால் அதை வெற்றிகரமாக முடித்துவிடுவீர்கள்.

ஆனால் மனம் வைப்பது என்பது நிரம்பவும் கடினம் உங்களுக்கு. எதையும் ஏகப்பட்ட உற்சாகத்துடன் தொடங்கிவிட்டு இடையிலே கைவிடுவது உங்கள் பழக்கம்.

எதைச் செய்தாலும் உடனடியாகப் பலன் தெரிந்தாக வேண்டும் என்று துடிப்பீர்கள். யாருடனும் எளிதில் பழகுவதில் வல்லவராக உள்ள நீங்கள் அதை நீண்ட நாள் தொடர்வதில் சிக்கலுண்டு.

வாழை

தொடர்புடைய படம்

மிகவும் மென்மையானவராக இருப்பீர்கள் . பிறருடன் இரக்கத்துடன் பழகுவீர்கள். ஆனால் உங்களுக்குக் கூச்ச சுபாவம் அதிகம். பிறருடன் கலந்து பழக மாட்டீர்கள்.

உங்களுக்கு தன்னம்பிக்கையும் கொஞ்சம் குறைவுதான். உங்கள் மென்மையான குணத்தினை சிலர் அவர்களுடைய லாபத்திற்குப் பயன்படுத்திக்கொண்டு விடுவர்.

உங்கள் இனிய குணத்தினால் உங்கள் குடும்ப வாழ்வில் எப்பொழுதும் அமைதியும் அன்பும் நிலவும். கவனமா இருக்க வேண்டிய ஆள் நீங்கள்!

ஆரஞ்சு

தொடர்புடைய படம்

அதிக அளவு பொறுமையும் அதே அளவு திடமான மன உறுதியும் உள்ளவர்கள் நீங்கள். கடின உழைப்பின் மூலம் உங்கள் இலக்கை அடைவது உங்கள் நோக்கமாக இருக்கும்.

நீங்களும் கூச்ச சுபாவம் உடையவர்தான் என்றாலும் நம்பிக்கைக்குரிய நண்பராக இருப்பீர்கள். பொதுவாக சண்டை சச்சரவை விரும்பாதவர்களாகிய நீங்கள் மிகுந்த அழகுணர்ச்சியை உடையவர்.

உங்கள் வாழ்க்கைத்துணையை அதிகக் கவனத்துடன் தேர்ந்தெடுப்பீர்கள்.

அன்னாசி

தொடர்புடைய படம்

நீங்கள் எந்த விசயத்தையும் ஆலோசித்து நிதானமாக செயல்படுத்துவீர்கள். உங்களுக்கு அதனால் லாபம் ஏற்படும் எனில் எத்தனை முறை வேண்டுமானாலும் துணிவுடன் தொழிலை மாற்றிக்கொண்டிருக்கும் பழக்கமுடையவர் நீங்கள்.

தன்னிறைவுடனும் நேர்மையாகவும் இருப்பது உங்கள் தன்மை. எளிதில் யாரிடமும் நட்புக் கொள்ள மாட்டீர்கள் ஆனால் அப்படி நட்புக்கொண்டால் வாழ்நாள் முழுவதும் அந்நட்பைத் தொடர்வீர்கள்.

உங்கள் துணைவர் / துணைவி உங்கள் ஒளிவு மறைவில்லாத குணத்தால் ஈர்க்கப் பட்டாலும் அன்பை வெளிக்காட்டத்தெரியாத உங்கள் தன்மை அவரை சலிப்படையச் செய்துவிட வாய்ப்புண்டு.

திராட்சை

திராட்சை க்கான பட முடிவு

கோபம் பொங்கி வரும் அதே வேகத்தில் அடங்கியும் விடுவது உங்கள் சிறப்பியல்பு. அழகினை ஆராதிப்பவர் நீங்கள்.

உங்கள் தோழமையான அணுகுமுறையாலும் வெளிப்படையாகப் பாராட்டும் குணத்தினாலும் உங்களுடைய நட்பு பலராலும் விரும்பப் படும். உங்கள் வட்டத்தில் நீங்கள் பிரபலமானவராக இருப்பீர்கள்.

நீங்கள் செய்யும் எந்தச் செயலாக இருந்தாலும் அதை ஏனோதானோ என்று செய்யாமல் ரசித்து செய்வீர்கள்.

செர்ரி

தொடர்புடைய படம்

உங்களுக்குப் பிடித்த இடம் உங்கள் வீடுதான். குடும்பமும் நெருங்கிய உறவுகளும் சூழ இருப்பதையே நீங்கள் அதிகம் விரும்புவீர்கள். ஆனால் உங்கள் தொழிலில் உங்களுக்கென்று ஒரு நிலையான இடத்தைப் பிடிக்க இயலாது.

எப்பொழுதும் ஏற்றமும் இறக்கமுமாகவே இருக்கும். சிறுகச் சிறுகத்தான் உங்களால் சேமிக்கக் கூட முடியும். உங்களுக்குக் கற்பனைத்திறனும் படைப்பாற்றலும் அதிகம் உண்டு.

ஒரே மாதிரியான சலிப்பு தரும் வேலைகளை விரும்பமாட்டீர்கள்.

சீதாப்பழம்

தொடர்புடைய படம்

எதையும் ஆழ்ந்து ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்துத்தான் முடிவு செய்வீர்கள். ஒரு இலக்கை நிர்ணயித்துக் கொண்டு அதைக் கண்டிப்பாக அடைந்து விடுவீர்கள்.

ஆனால் அவசரமோ பதற்றமோ உங்கள் பக்கத்தில் கூட வராது. விரிவாக விளக்கப் படவேண்டிய பணி அல்லது புள்ளிவிவரங்கள் தொடர்பான பணிதான் உங்களுக்கு மிகவும் பிடித்தமான பணியாக இருக்கும்.

புற அழகு அல்லது மற்ற குணங்களை விட அறிவுத்திறன் வாய்ந்தவரே துணையாக இருக்கவேண்டும் என்று விரும்புவீர்கள்.

ஆப்பிள்

தொடர்புடைய படம்

தாராளமாக செலவு செய்யத்துடிப்பீர்கள்! குழுவை வழிநடத்திச் செல்லக்கூடிய ஆற்றல் உங்களிடம் இருக்கும்.

எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் வெளிப்படையாக பேசிடும் உங்களுக்கு உணர்சிகளை கட்டுப்படுத்த தெரியாது.

எந்த வேலையைக் கொடுத்தாலும் அதீத ஆர்வத்துடன் எடுத்து செய்வீர்கள்.

மாதுளம்பழம்

தொடர்புடைய படம்

சின்ன சின்ன விஷயங்களுக்கு டென்ஷன் ஆவீர்கள். நீங்கள் எந்தச் செயலைச் செய்தாலும் கச்சிதமாக நேர்த்தியாக இருப்பது போல் பிறரும் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதால் அடுத்தவர்களிடம் நிறையக் குற்றம் கண்டுபிடித்தபடியே இருப்பது உங்கள் குறைபாடு.

கொஞ்சம் வெட்கமும் கூச்சமும் நிறைந்தவராக இருப்பதால் உங்கள் பிரியத்தை யாரிடமும் காட்டிக்கொள்வது உங்களுக்கு மிகவும் சிரமமான காரியம்.

தர்பூசணிப்பழம்

தொடர்புடைய படம்

வெயில் காலங்களில் அதிகம் கிடைக்கும் இந்த பழத்தை விரும்புபவர்கள். மிகவும் எளிமையானவராக இருப்பீர்கள்.

விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் உங்களுக்கு அதிகமிருக்கும். அதே நேரத்தில் தவறு உங்கள் மீது இருந்தால் மன்னிப்பு கேட்கவும் தயங்க மாட்டீர்கள்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]