இதற்கு பின் நான் சத்தியமா பேட்டை தொடவே மாட்டேன்- பெரும் அதிர்ச்சியில் ரசிகர்கள்??

இந்திய அணியின் தலைவரான கோலி ஓய்வுக்கு பின் நான் பேட்டை தொடவே மாட்டேன் என்று கூறியுள்ளார்.

கோலி தலைமையிலான இந்திய அணி,ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் டி20 தொடர் 1-1 என சமநிலை ஆன நிலையில், நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்று கைப்பற்றி சாதனை படைத்தது.

இதைத் தொடர்ந்து இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது.

இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் தலைவர் கோஹ்லியிடம் நிரூபர் ஒருவர், ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் டி20 லீக் தொடர் நடக்கிறது.

ஒருவேளை பிசிசிஐ இந்திய வீரர்களுக்கான தடையை தளர்த்தினாலோ அல்லது ஓய்விற்குப் பிறகு பிக் பாஷ் தொடரில் விளையாடுவீர்களா? என்று கேள்வி எழுப்பினார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின் என்ன திட்டம் என்பதை இதுவரை சிந்திக்கவில்லை.

ஆனால் எப்போது நான் போதுமான அளவு கிரிக்கெட் விளையாடிவிட்டேன் என தோன்றுகிறதோ அப்போது ஓய்வு பெறுவேன். ஆனால், அடுத்த நாளில் இருந்து பேட்டை சத்தியமாக தொடக்கூட மாட்டேன் என்று கூறியுள்ளார்.

ஓய்விற்கு பின் ஒரு சிலர் வீரர்கள் உள்ளூர் தொடர்களில் விளையாடி அவர்களது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவர். ஆனால் கோஹ்லி இப்படி கூறியிருப்பது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]