இதய நோய்களில் இருந்து தப்பிக்க கருப்பு சாக்லேட் சாப்பிடலாம்…

இதய நோய்களில் இருந்து தப்பிக்க கருப்பு சாக்லேட் சாப்பிடலாம்…

சாக்லேட் என்றால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணுவார்கள்.எனினும் சாக்லேட் சாப்பிடுவதனால், கொலஸ்ட்ரோல் அதிகமாகி இதய நோய்கள் வரும் என பலருக்கும் அச்சம் இருக்கின்றது.

ஆனால் தற்போது, மாதம் மூன்று சாக்லேட்டுகளை சாப்பிடுபவர்களுக்கு இதய நோய் பாதிப்பின் அளவு 13 சதவீதம் குறைவாக இருக்கும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதாவது, கருப்பு சாக்லேட் சாப்பிடுவது இதயத்திற்கு நல்லது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிலுள்ள கோகோவில் உள்ளடங்கி இருக்கும் இயற்கை மூலப்பொருட்கள் ரத்த குழாய்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், வீக்கத்தை குறைக்கவும் உதவுகிறது என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

சாக்லேட்டில் உள்ள பிளவோனாய்டுகள் நல்ல கொழுப்பை அதிகரிக்கவும், ரத்த குழாய்களின் வீக்கத்தை கட்டுப் படுத்தவும் உதவுகிறது என்கிறார்கள்.

கருப்பு நிற சாக்லேட் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. அதிலிருக்கும் கோகோ உடல் நலத்திற்கு ஏராளமான நன்மைகளை விளைவிக்கிறது. அதில் சர்க்கரையின் அளவும் சீராக இருக்கிறது.

சாப்பிடும் சாக்லேட்டில் குறைந்தபட்சம் 75 சதவீதம் கோகோ உள்ளடங்கி இருக்க வேண்டும். அத்தகைய சாக்லேட்டுகளை சாப்பிடுவதுதான் ஆரோக்கியத்திற்கு நல்லது. என்பதும் ஆராய்ச்சியாளர்களின் கருத்தாக இருக்கிறது.

ரத்த ஓட்டம் சீராக நடை பெறுவதற்கும், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பாதிப்புகளில் இருந்து விடுபடுவதற்கும் கருப்பு சாக்லேட் சாப்பிடலாம். 100 கிராம் கருப்பு சாக்லேட்டில் 75 முதல் 85 சதவீதம் வரை மெக்னீசியம், தாமிரம், இரும்பு, மாங்கனீஷ், பாஸ்பரஸ், பொட்டாசியம், சீலியம், தாதுக்கள் உள்ளிட்ட கோகோ மூலப்பொருட்கள் இருக்கின்றன.

அதேவேளையில் இதய நோய், சர்க்கரை நோய், சிறுநீரக நோய் பாதிப்புக்கு ஆளாகி இருப்பவர்கள் டொக்டர்களிடம் கலந்தாலோசித்துவிட்டு சாப்பிட வேண்டும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]