இதய நோயை முன்கூட்டியே அறிந்து கொள்ள உதவும் புதிய தொழில்நுட்பம்

இதய நோயை முன்கூட்டியே அறிந்து கொள்ள உதவும் புதிய தொழில்நுட்பம் ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோ சொப்ட் நிறுவனம் இதற்காக் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை வெளியிட்டுள்ளது.

மைக்ரோ சொப்ட்அஸ்யூர் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த மென்பொருள் இந்தியர்களிடம் இதய நோய் வருவதற்கான ஆபத்தை மிகத்துல்லியமாக கண்டறியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இருதய நோய் சார்ந்த பல்வேறு மருத்துவ அறிக்கை விவரங்களை இணைத்து இந்த மென்பொருள் இயக்குவதாக கூறப்படுகின்றது.

மேலும் பாதிப்பு மிக அதிகமாகவோ, அதிகமாகவோ அல்லது துவக்க நிலையில் உள்ளதா என்பதையும் இந்த மென்பொருள் கணித்து வழங்குகிறது.

ஏ.ஐ. சார்ந்த ஏ.பி.ஐ. மூலம் அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் இதய துடிப்பு நோய் வருவதை முன்கூட்டிய கணிக்க முடியுமா என்று பரிசோதித்து வருகின்றனர்.

ஸ்மார்ட்போன்களில் பல்வேறு வசதிகளை வழங்க செயற்கை நுண்ணறிவு, ஆக்மென்டெட் ரியாலிட்டி என்ற இரு தொழில்நுட்பங்களும் அவசியமானதாகவும், தவிர்க்க முடியாததாகவும் இருக்கின்றன. அந்த வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மருத்துவ துறையில் பல்வேறு புதுமைகளை படைக்க ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]