தல அஜித்  அடுத்து தல 59 படத்தில் நடிக்கவுள்ளார். இந்த நிலையில் துப்பாக்கி சுடும் போட்டியில் ஆர்வம் காட்டி வருகின்றார்.  இந்நிலையில் தல அஜித் துப்பாக்கி சுடுதல் பயிற்சயில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது அங்கே வந்த ரசிகர்கள் சிலர் நாங்கள் 5 மணி நேரமாக காத்துக்கொண்டிருக்குகிறோம் ஒரே ஒரு புகைப்படம் மட்டும் எடுத்துக்கொள்கிறோம் தல என்று தொல்லை செய்து கொண்டிருந்தனர்.

பொதுவாக புகைப்படம் எடுக்க கேட்டால் பக்குவமாக சொல்லும் அஜித் இம்முறை ரசிகர்களை பார்த்து இங்கிருந்து போய் விடுங்கள் என்பது போல கை எடுத்து கும்பிட்டுள்ளார்.   அஜித்தின் பயிற்சியாளரும் ரசிகர்களிடம் இதுக்கு பயந்து கொண்டு தான் அவர் வருவதே இல்லை. அவரை கொஞ்சம் பிராக்டீஸ் எடுக்க விடுங்க என கேட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]