இணைய பக்கேஜ்களுக்கு 10 சதவீத போனஸை வழங்கத் தீர்மானம்

இணைய பக்கேஜ்களுக்கு 10 சதவீத போனஸை வழங்குவதற்கு, சகல தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களும் தீர்மானித்துள்ளனர்.

இணைய பக்கேஜ் அட்டைகளுக்கான தொலைத்தொடர்புகளுக்கான வரி நேற்று (22) முதல் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, சகல அலைபேசி மற்றும் fixed line வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீத போனஸ் டேட்டாவை சகல தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களும் நல்லெண்ணத்துடன் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளனர்.

அரசாங்கத்தால் இணைய பக்கேஜ்களுக்கான தொலைத்தொடர்பு வரி குறைக்கப்பட்டுள்ளமை, டிஜிட்டல் ஸ்ரீ லங்காவை உருவாக்குவதற்கு பாரிய முன்னோக்கிய நகர்வாக அமையும் என, தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.