இணையவழி வர்த்தக நடவடிக்கைகளுக்கு புதிய சட்டம் அமுலாக்கம்!!

இலங்கையில் இணையவழி வர்த்தக நடவடிக்கைகளிற்கு புதிய சட்டங்களை அமுலாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை இதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈகொமர்ஸ் எனப்படும் மின்வர்த்தகம் தொடர்பாக இலங்கையில் உள்ள சட்டத்திட்டங்களும், ஒழுங்குவிதிகளும் போதுமானதாக இல்லை.

இந்தநிலையில் இதற்கான புதிய ஒழுங்குவிதிகளையும், கட்டுப்பாடுகளையும் உருவாக்குவதற்காக, சர்வதேச வர்த்தக மையத்துடன் இணைந்து, இலங்கை நுகர்வோர் அதிகார சபை நடவடிக்கைகளை எடுக்கிறது.

இதற்காக கொழும்பில் இன்றும் நாளையும் முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளதாகவும், இதில் சர்வதேச வர்த்தக மையத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.