இணையமயமாகும் பரீட்சை நடவடிக்கைகள்

பரீட்சை மற்றும் மதீப்பீட்டு பணிகளை இணையமயப்படுத்துவது தொடர்பில் கல்வியமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.

இதற்காக மலேசியாவின் புத்ரா பல்கலைகழக்கத்தின் நடைபெறும் பயிற்சி வகுப்பில் பங்குபெறுவதற்காக இலங்கையில் இருந்து குழுவொன்று அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் திணைக்களத்தின் 12 அதிகாரிகள் மற்றும் தேசிய கல்வி நிறுவகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூவர் அடங்கிய குழுவினரே அங்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர்.

இந்தக் குழுவினர் நாளைய தினம் நாட்டில் இருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]