இணையத்தளம் ஊடாக பெறுபேறுகளை உறுதிபடுத்த நடவடிக்கை

இலங்கை பரீட்சை திணைக்களத்தின் பெறுபேறுகளை இணையத்தளம் ஊடாக உறுதி செய்துகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான முதற்கட்ட நடவடிக்கை நேற்று ஆரம்பமாகியுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், சுமார் 6 இலட்சத்திற்கு மேற்பட்ட சான்றிதழ்களின் பெறுபேறுகளை உறுதி செய்வதற்காக பரீட்சை திணைக்களத்திற்கு விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறுவதாக அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இவற்றில் பெரும்பாலானவை நாட்டிலுள்ள வலய கல்வி அலுவலகங்களில் இருந்து கிடைக்கப்பெறுவதாகவும் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது, பரீட்சை சான்றிதழை உறுதி செய்யும் நடவடிக்கை பரீட்சை திணைக்களத்தின் சான்றிதழ் கிளை மூலம் மேற்கொள்ளப்படுகின்றது.

இந்நிலையில், பெறுபேறுகளை இணையத்தளம் ஊடாக உறுதி செய்யும் முறையொன்றை கல்வியமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் ஊடாக, அனைத்து பணிகளும் பரீட்சை திணைக்களத்தின் முழுமையான கண்காணிப்பில் மேற்கொள்ளப்படவுள்ளது.

பரீட்சை திணைக்களத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம். இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]