இணக்கமின்றி முடிவடைந்த உத்தேச மாகாண சபைத் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல்

உத்தேச மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இணக்கப்பாடின்றி நிறைவடைந்தது.

சபாநாயகர் கரு ஜெயசூரியவின் தலைமையில் இந்த கூட்டம் இடம்பெற்றது.

இதேவேளை இன்று பிற்பகல் ஒரு மணியளவில் நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகிறது.

அதற்கு முன்னர் அரசாங்க மற்றும் எதிர்கட்சி குழுக்களின் பிரத்தியேக குழுக் கூட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

இதேவேளை, கடந்த வருடம் நவம்பர் மாதம் 14ம், 15ம் மற்றும் 16ம் திகதிகளில் நாடாளுமன்றில் இடம்பெற்ற வன்முறைகள் குறித்த அறிக்கை தற்போது சபாநாயகர் கருஜெயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை நாளை அல்லது நாளை மறுதினம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டதன் பின்னர் இந்த அறிக்கை நாடாளுமன்ற வரப்பிரசாதங்கள் மற்றம் ஒழுக்க குழுவிற்கு பாரப்படுத்தப்படவுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]