இடைக்கால கணக்கறிக்கைக்கு சு.க. ஆதரவு

2019ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதகாலப் பகுதிகளுக்கான அரச செலவீனங்களை மேற்கொள்ளும் வகையில் நாடாளுமன்றில் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால கணக்கறிக்கைக்கு ஆதரவளிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றில் இடம்பெற்றுவரும் இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர இவ்வாறு கூறினார்.
அரசு நல்ல விடயங்களுக்கு நாட்டின் நன்மைக் கருதி ஆதரவளிப்போம். அதேபோல் தவறுகளுக்கு எதிராகச் செயற்படுவோம் என்றும் அவர் கூறினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]