இடைக்கால அறிக்கையை ஆதரிக்குமாறு ஒரு கட்சியும், எதிர்ப்பதற்காக வாக்களிக்குமாறு மற்றொரு கட்சியும் வடகிழக்கில் பொய்ப் பிரச்சாரங்கள்

இடைக்கால அறிக்கை

நடைபெறவுள்ள உள்ளுராட்சி தேர்தலில் இடைக்கால அறிக்கையை ஆதரிக்க வாக்களிக்குமாறு ஒரு கட்சியும் இடைக்கால அறிக்கையை எதிர்ப்பதற்காக வாக்களிக்குமாறு மற்றொரு கட்சியும் வட கிழக்கில் பொய்ப் பிரச்சாரங்கள் செய்து வருகின்றன

ஆனால் நடைபெறவுள்ள உள்ளுராட்சி தேர்தலானது உரிமைக்கானதோ அல்லது அரசியல் தீர்வுக்கான தேர்தலோ அல்ல மாறாக நிலையான கிராமமட்ட அபிவிருத்தியை நோக்கியதாகவே இத்தேர்தலை மக்கள் அணுகவேண்டும் என இணைந்த வடகிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் தெரிவித்துள்ளார்

மெழுகுதிரி சின்னத்தில் யாழ் சாவகச்சேரி மாநகர மற்றும் பிரதேச சபையில் போட்டியிடும் தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடும் வேட்பாளர் அறிமுகமும் இன்று யாழ் வை.எம்.சி.ஏ மண்டபத்தில் இடம்பெற்றது

இந்த கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்ததுடன் அக்கட்சியின் தலைவரான சிறிதரனும் ஊடகங்களுக்கு கருத்து வெளிளியட்டார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]