இடிமின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் பலி

இடிமின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் பலி

மட்டக்களப்பு- மாவடிஓடை வயற்பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை பிற்பகல் இடிமின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விவசாயிகள் மூன்று பேர் வயற்வேலை செய்துகொண்டிருக்கையில் மழை பெய்ய ஆரம்பித்ததனால் மரம் ஒன்றின் கீழ் ஒதுங்கி நின்றவேளையில் இடிமின்னல் தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பு- பனிச்சையடி பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சின்னத்தம்பி மனோகரன் என்ற 60 வயதுடைய நபரே உயிரிழந்தவரென அடையாளம் காணப்பட்டுள்ளது.

செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்த சடலம் மீதான உடற்கூறு பரிசோதனையை டாக்டர் கே. சுகுமார் மேற்கொண்டதையடுத்து மரண விசாரணையதிகாரி எம்எஸ்எம். நஸீர் விசாரணைகளை ஆரம்பித்தார்.

கரடியனாறு பொலிஸ் உத்தியோகத்தர் பிறேம் நஸீர் மரணித்தவரது குடும்ப உறவினர்களிடம் வாக்கு மூலத்தினைப் பதிவு செய்தார்.

இடிமின்னல் தாக்கியதில்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]