இசைப்புயலுக்கு 2017ஆம் ஆண்டுக்கான ஒஸ்கார் விருதில் ஏமாற்றம்!

2017 ஆம் ஆண்டுக்கான ஒஸ்கார் விருதினை பெறும் வாய்ப்பு, இசையமைப்பளர் ஏ.ஆ.ரஹ்மானு்ககு கிடைக்கவில்லை. 2017ஆம் ஆண்டுக்கான ஒஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள பிரபலங்களில் இறுதிப் பெயர் விவரப்பட்டியில் வெளியிடப்பட்டுள்ள நிலையில்,

அதில் இசையமைப்பளர் ஏ.ஆ.ரஹ்மானின் பெயர் இல்லை.“ஸ்லம் டோக் மில்லியனர்” என்ற திரைப்படத்துக்கான சிறந்த இசையமைப்பாளருக்கான ஓஸ்கார் விருதினை, இசையமைப்பளர் ஏ.ஆ.ரஹ்மான், “ஜெய் ஹோ” பாடலுக்காக 2009ஆம் ஆண்டு பெற்றுக்கொண்டார்.

இந்நிலையில், “பீலே” திரைப்படத்துக்காக இம்முறை அவருக்கு ஒஸ்கார் விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும், விருதுக்கான இறுதிப் பெயர்ப்பட்டியலில் அவருடைய பெயர் இடம்பெறவில்லை.

இந்தப் பிரிவில், “ஜாக்கி, லா லா லாண்ட், லயன், மூன்லைட் மற்றும் பெசன்ஜர்” ஆகியப் பாடல்கள், விருதுக்காக பரிந்துரைக்ப்பட்டுள்ளன. விருது வழங்கும் நிகழ்வு, பெப்ரவரி 26ஆம் திகதி இடம்பெறவுள்ளது.