கணித, விஞ்ஞானப் பட்டதாரிகள் இங்கு இருந்தால் ஏன் இந்தியாவில் இருந்து அழைத்துவருகிறோம்: இராதா ஆவேசம்

இந்தியாவில் இருந்து மலையகத்திற்கான கணித, விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்களை அழைக்க இருப்பதை விமர்சிப்பவர்களுக்கு கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிழஷ்ணன் சவால் விடுப்பு.
நான் மலையத்தில் தற்போது உருவாக்கபட்டுள்ள 25 கணித, விஞ்ஞானப் பாடசாலைகளுக்கும், ஏனைய உயர்தரத்தில் கணிதம், விஞ்ஞானம் கற்பிக்கபடும் பாடசாலைகளுக்கும் உயர்தர விஞ்ஞான, கணிதப்பாட ஆசிரியர்களை இந்தியாவில் இருந்து வரவழைக்கபடுவதை பலர் பல விதமாக ஊடகங்களிலும், முகப்புத்தகங்களிலும் இலத்திரணியல் ஊடகங்களிலும் விமர்சித்து வருகின்றனர்.

அதில் அவர்களின் பிரதான கேள்வி இலங்கைளில் பட்டதாரிகள் இல்லையா? தற்போது தொழிலுக்காகப் போராட்டம் நடாத்தும் பட்டதாரிகளை இணைத்துக் கொள்ளலாம் தானே? என்று. உண்மை தான். இவர்களில் எத்தனைப் பேர் உயர்தரக் கணித, விஞ்ஞான மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க கூடிய பட்டதாரிகளாக இருக்கின்றார்கள். இவர்களில் பெரும்பாலோனோர் கலை மற்றும் வர்த்தகப் பிரிவு பட்டதாரிகள்.
இவர்களை வைத்துக்கொண்டு உயர்தரத்தில் எப்படி கணித, விஞ்ஞானப் பிரிவை அபிவிருத்தி செய்யமுடியும். அவர்கள் கூறுவதை போல் பட்டதாரிகள் இருப்பார்கள் என்றால் இச்சந்தர்பத்தில் இலங்கையில் உள்ள அனைத்துக் கணித, விஞ்ஞான உயர்தர மாணவர்களுக்கு பௌதிகவியல், இரசாயணவியல், உயிரியல், இணைந்த கணிதம் கற்பிக்க கூடிய பட்டதாரிகளுக்கு நான் ஒரு முழு திறந்த அழைப்பை விடுக்க விரும்புகின்றேன்.

நீங்கள் எங்கு இருந்தாலும் பரவாயில்லை. மலையகத்தில் உங்களுக்கு ஆசிரியர் தொழில் செய்ய விருப்பம் என்றால் உடனடியாக என்னைத் தொடர்புகொள்ளுங்கள் உங்களுக்கான நியமனத்தை நான் பெற்றுத்தருகின்றேன். அறிக்கைவிடுபவர்களுக்கு நான் ஒரு சவாலையும் விடுகின்றேன். முடிந்தால் அறிக்கை விடாமல் உயர்தர கணித விஞ்ஞான மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க கூடிய விஞ்ஞானப் பட்டதாரிகளை கொண்டு வந்துதாருங்கள் எனச் சவால் விடுத்துள்ளார்.

எனக்கும் தெரியும் இலங்கையில் பட்டதாரிகள் வேலையில்லாமல் இருப்பதும் அதற்காக போராட்டங்கள் நடாத்துவதும். இவர்களில் பெரும்பாலோனோர் கலை, வர்த்தகத் துறைகளை சார்ந்தவர்கள். இவ்வாறு மலையகத்திலும் உள்ளார்கள். ஆனால், போதிய அளவு கனித, விஞ்ஞானப் பட்டதாரி ஆசிரியர்கள் இல்லை இதற்காக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஆளுனர்கள், முதல் அமைச்சர்கள், கல்வி அமைச்சர்களையும் தொடர்புகொண்டு கேட்டோம் அங்கு இருந்தாலாவது பட்டதாரிகளைத் தாருங்கள் என்று அவர்களும் கூறுகின்றார்கள்.

இங்கும் போதிய அளவு கனித, விஞ்ஞானப் பட்டதாரிகள் இல்லை. இங்குள்ள பாடசாலைகளுக்கும் கணித, விஞ்ஞானப் பட்டதாரிகள் பாரிய அளவில் தேவைபாடு உள்ளது. இந் நிலையில் எங்களால் எப்படி உங்களுக்கு கணித விஞ்ஞான பட்டதாரிகளை வழங்க முடியும் என்று. இதனை நிவர்த்தி செய்ய ஓய்வுபெற்ற கணித, விஞ்ஞான ஆசிரியர்களை குறிபிட்ட காலத்திற்கு மீண்டும் இணைக்கலாம் என்று எண்ணி நாடாளுமன்ற அனுமதியையும் பெற்றோம். அதற்கும் இதுவரை யாரும் விண்ணபிக்கவில்லை. தற்போதும் அவர்கள் விண்ணபிக்கலாம்.

தற்போது க.பொ.சாதாரணதர பெருபேறுகள் வந்து மாணவர்கள் உயர்தரத்தில் கணித விஞ்ஞான பிரிவுகளில் கல்விகற்க பாடசாலைகளுக்கு விண்ணபித்து வருகின்றனர். தெரிவுசெய்யபட்ட 25 பாடசாலைகளுக்கும் 250 மில்லியன் ரூபாவிற்கு பெருமதியான விஞ்ஞான, கணித உபகரணங்களும், தளபாடங்கள், கட்டட திருத்தம்¸ உட்கட்மைப்பு வசதிகள்¸ ஆசிரியர்களுக்கான தளபாடங்கள¸ வகுப்பறைகளுக்கான அலுமாரிகள் உட்பட பல்வேறு பொருட்கள் வழங்கபட்டுள்ளது.

கணித, விஞ்ஞானப்

எதிர்காலத்தில் இந்த பாடசாலைக்குத் தேவையான மேலதிக கட்டட வசதிகள்¸ கட்டட திருத்தம்¸ புதிய வகுப்பறைகள்¸ மலசல கூடம்¸ குடி நிர் வசதி போன்றவையும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்ள்ளது.

இவை எல்லாம் வழங்கிய போதும் போதிய அளவு ஆசிரியர்களை வழங்க முடியாமல் உள்ளது. இந்நிலையில், உடனடியாக இந்த மாணவர்களுக்கு நாங்கள் பொறுப்புகூர கடைமைபட்டுள்ளோம். இவர்களின் வாழ்க்கையில் விளையாட முடியாது. கணித, விஞ்ஞான பட்டதாரிகள் இலங்கைளில் உருவாகும் வரை இவர்களை வைத்தக் கொள்ள முடியாது.

உடனடியாக ஒரு முடிவை எடுக்க வேண்டும் அதனாலயே இந்திய தூதுவருடன் பேசி இந்தியாவில் இருந்தாவது இந்திய கணித விஞ்ஞான பட்டதாரிகளை குத்தகை அடிபடையிலோ அல்லது யுத்தம் காரணமாக வடக்கில் இருந்கு இந்தியாவிற்கு அகதிகளாக சென்று அங்கு படித்து முகாம்களில் இருக்கும் கணித, விஞ்ஞான பட்டதாரிகளை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆசிர்வாதத்துடன் இலங்கைக்கு அழைத்து நியமனம் வழங்கலாம் என்று ஒரு திட்டத்தை கொண்டு வந்தேன்.

இவர்களை இங்கு அழைப்பதன் ஊடாக அவர்களின் மீள் குடியோற்றமும் உருதி செய்யபடுகின்றது. இவர்களும் இலங்கையர்கள் தானே. அவர்களுக்கு நியமனம் வழங்துவதில் தப்பு இல்லை. தற்போது வடக்கு மற்றும் கிழக்கில் போராட்டம் நடாத்திவரும் பட்டதாரிகளிடழும் கதைத்தோம். உங்களுக்கு மலையததில் வந்து சேவை செய்ய முடியும் என்றால் வாருங்கள். அவர்கள் என்னை வந்து சந்திப்பதாகவும் கூறியுள்ளார்கள். இருந்தும் அவர்களும் கூறுகின்றார்கள். எங்களிடமும் கனிசமான அளவான கணித, விஞ்ஞான பட்டதாரிகளே இருக்கின்றார்கள் என்று. இந்நிலையில் அறிக்கை விடுபவர்களும் விமர்சனம் விடுவர்களும் என்ன? செய்யலாம் என்று கூறுங்கள் பார்ப்போம என்று கூறினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]