இங்கிலாந்து இளவரசர் திருமணத்திற்கு ப்ரியங்கா சோப்ரா அணிந்திருந்த காலணியின் விலை எவ்வளவு தெரியுமா??

இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்க்கல் திருமணம் கடந்த 19 திகதி லண்டனில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

பிரித்தானிய அரச குடும்பத்தை சேர்ந்த இவர்களின் திருமணம் சனிக்கிழமை காலை, இங்கிலாந்தில் உள்ள விண்ட்சார் கோட்டை அருகே இருக்கும் செயின்ட் ஜார்ஜ் சேப்பல் தேவாலயத்தில் மிகவும் விமர்சியாக நடைபற்றுவந்தது. சில இந்திய பிபலங்களும் இதில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் .

இதில் மிகவும் முக்கியமானவர் பாலிவுட்டில் நடித்து தற்பொழுது ஹாலிவுட்டில் பிசியாக இருக்கும் ப்ரியங்கா சோப்ரா தான்.

நடிகை மெகன் மார்கலும் பார்ட்டி ஒன்றில் சந்தித்து தோழிகளாகிவிட்டனர். அதனால் தோழி மெகன் அழைத்ததின் பேரில் ப்ரியங்கா அவரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.ப்ரியங்கா லாவண்டர் நிறத்தில் உடை அணிந்திருந்தார். அவர் ஜிம்மி சூ காலணி அணிந்து மெகனின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அந்த காலணியின் விலை ரூ. 1.34 லட்சம் ஆகும். வியப்பு ப்ரியங்கா அணிந்திருந்த காலணியில் ஸ்வரோஸ்கி கற்கள் இருந்தது. ரூ. 1.34 லட்சம் மதிப்பிலான காலணி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.கவுன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலும் ப்ரியங்கா சோப்ரா கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு அவர் ஜொலி ஜொலிக்கும் டிசைனர் கவுன் அணிந்திருந்தார்.

இங்கிலாந்து இளவரசர் திருமணத்திற்கு இங்கிலாந்து இளவரசர் திருமணத்திற்கு

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]