இங்கிலாந்து – இந்தியா அணிகளுக்கிடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான ஐந்தாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று ஆரம்பமானது.
இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, முதலில் துடுப்பெடுத்தட தீர்மானித்தது. அதன்படி தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, நேற்றைய முதலாம் நாள் ஆட்ட நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 198 ஒட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.
பந்துவீச்சில், இஷாந்த் சர்மா, 3 விக்ககட்டுக்களை வீழ்த்த, பும்ரா மற்றும் ஜடேஜா ஆகியோர் தலாவ இரண்டு விக்கட்டுக்களைக் கைப்பற்றினர். போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது.
நடைபெற்று முடிந்த நான்கு டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி, 3-1 தொடரை தன்வசப்படுத்தியுள்ளது.
முன்னதாக நடைபெற்று முடிந்த ரி-ருவென்ரி தொடரை இந்திய அணியும், ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணியும் வெற்றி கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]