முகப்பு News இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 159 ஓட்டங்களால் வெற்றி

இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 159 ஓட்டங்களால் வெற்றி

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 159 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்திய அணி தமது முதலாவது இன்னிங்ஸில் 107 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

பின்னர் தமது முதலாவது இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்து அணி 7 விக்கட்ட இழப்பிற்கு 396 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தியது.

இந்நிலையில் தமது இரண்டாவது இன்னிங்சில் துடுப்பாடிய இந்திய அணி 139 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து தோல்வியை தழுவியது.

5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 2-0 என முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com