இங்கிலாந்து அணியே சிறந்த டெஸ்ட் அணி – அன்றுவ் ஃப்லின்டொப்

இங்கிலாந்து அணியேதற்போதுள்ள இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கட் அணியே மிகச் சிறந்த அணி என்று, முன்னாள் இங்கிலாந்தின் சகல துறை வீரர் அன்றுவ் ஃப்லின்டொப் தெரிவித்துள்ளார்.
ஏசஸ் தொடருக்காக இங்கிலாந்து அணி எதிர்வரும் 28ஆம் திகதி அவுஸ்திரேலியா நோக்கி பயணமாகவுள்ளது.
இதற்காக அறிவிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து குழாம் குறித்த விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்ற போதும், தற்போதுள்ள அணியே சிறந்த அணியாக இருப்பதாக ஃப்லின்டொப் தெரிவித்துள்ளார்.
நொவம்பர் மாதம் 23ஆம் திகதி பிரிஸ்பேனில் இந்த தொடர் ஆரம்பமாகவுள்ளது.
இந்தமுறை அவுஸ்திரேலியாவிற்கே அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
2005ஆம் ஆண்டு ஏசஸ் தொடரை வென்ற இங்கிலாந்து அணியில், அன்றுவ் ஃப்லின்டொப் உள்ளடங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]