இங்கிலாந்து அணியில் இணையும் புதிய சகலதுறை வீரர்!

இங்கிலாந்து கிரிக்கட் அணிக்காக ஜொஃப்ரா ஆர்ச்சர் விளையாட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் எதிர்வரும் உலக கிண்ண கிரிக்கட் மற்றும் அடுத்த ஆஷஸ் கிரிக்கட் தொடர்களில் விளையாடலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இங்கிலாந்து கிரிக்கட் அணியில் இணைவதற்கு, குறைந்த பட்சம் 7 வருடங்கள் பிரித்தானிய வதிவிட உரிமையை கொண்டிருக்க வேண்டும் என்ற கட்டாயம் நேற்று தளர்த்தப்பட்டு 3 வருடங்களாக குறைக்கப்பட்டுள்ளது.

பார்படோசை சேர்ந்த ஆர்ச்சர் 2015ம் ஆண்டு முதல் பிரித்தானியாவில் வசித்து வருகின்ற நிலையில், அவரால் இங்கிலாந்து அணியில் தற்போது இணைந்துக் கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சசெக்ஸ் அணிக்காக விளையாடிவரும் ஆர்ச்சர், தற்போது மிகச்சிறந்த சகலதுறை விளையாட்டாளராக வளர்ந்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]