இங்கிலாந்து அணிக்கு எதிரான இறுதி டெஸ்ட்டை இழந்த இந்திய அணி

இங்கிலாந்து அணிக்கு எதிரான இறுதி டெஸ்ட் போட்டியையும் இழந்துள்ளது இந்திய அணி.

118 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ள இந்திய அணி, இங்கிலாந்து அணியுடனான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் 4 போட்டிகளில் 3ல் தோல்வியை தழுவி தொடரை இழந்துள்ளது.

முதல் இரு போட்டிகளில் அடைந்த தோல்விக்குப் பின் 3 ஆவது போட்டியில் இந்திய அணி வெற்றிப்பெற்றது. ஆனால், 4 ஆவது போட்டியில் தோல்வியைத் தழுவியதால் தொடரை பறிகொடுத்துள்ளது.

இந்நிலையில் 5 ஆவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை ஆரமபமாகியது. இதில் நாணய சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 332 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தது.

பின் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 292 ஓட்டங்களுக்குள் அட்டமிழந்தது. இதனால் 42 ஓட்டங்கள் முன்னிலையுடன் தனது 2 ஆவது இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து 8 விக்கெட்களை இழந்து 423 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட நிலையில் தனது ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

அதன் பிரகாரம் 464 ஓட்டங்கள் இந்தியாவிற்கு வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இருப்பினும் இந்தியா அனைத்து விக்கெட்களையும் இழந்து 345 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

இதனால் 118 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 4-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து அணிக்கு இங்கிலாந்து அணிக்கு இங்கிலாந்து அணிக்கு

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]