ஆஸ்துமா நோயை குணப்படுத்தலாம்

நீண்டகாலம் தொடர்ச்சியான வைத்திய ஆலோசனைக்கமைவாக ஆஸ்துமா நோயை நிரந்தரமாக குணமாக்குவதற்கு மருந்தை முறையாகப்பயன்படுத்த வேண்டுமென்று ஹம்பாந்தோட்டை வைத்தியசாலை இருதய நோய் விசேட வைத்தியர் திருமதி துஷார கலபொட தெரிவித்துள்ளார்.

ஆஸ்துமா
இருதயத்தில் உள்ள நாளங்களில் அடைப்புகள் ஏற்படுவதே இதற்கான காரணங்களில் ஒன்றாகும்.

வீடுகளில் துகள்கள் காணப்படுமாயின் அது ஆஸ்த்துமா நோய்க்கு காரணமாக அமையும்.

துகள்களில் காணப்படும் சிறிய கிருமிகள் சுவாசப்பைக்குள் பிரவேசித்து தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே ஆஸ்த்துமா நோயாளர் உள்ள வீட்டை சுத்தம் செய்யும் போது கூடுதலான கவனம் செலுத்த வேண்டுமென்று அவர் இதன்போது தெரிவித்தார்.

பெரும்பாலான நோய்களுக்கு சில காலம் மருந்துகளைப் பயன்படுத்தி நிவாரணம் பெற்ற பின்னர், தாம் நினைத்தபடிமருந்துகளை நிறுத்துவதனால் ஆஸ்த்துமா நோய் மீண்டும் ஏற்படுமென்று வைத்தியர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]