ஆஷிபாவை பலாத்காரம் செய்து கொலைசெய்த காமவெறியனுக்கு மக்கள் கொடுத்த தண்டனை!!

இந்தியாவில் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த ஆஷிபா என்ற சிறுமியை எட்டுபேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியது.

ஜனவரி மாதம் காணாமல் போன இச்சிறுமி ஏப்ரல் மாதத்தில் சடலமாக மீட்கப்பட்டார். பல நாட்களாக உணவு கூட கொடுக்காமல் கோவில் ஒன்றில் மறைத்து வைத்து மயக்கத்தில் இக்கொடுமையினை அரங்கேற்றினர்.

இதில் ஒரு குற்றவாளியினை பொலிசார் கைது செய்து அழைத்து வந்த தருணத்தில் பொதுமக்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி அவரைத் தாக்கியுள்ளனர். சிறுமியை சீரழித்தவர்களில் ஒருவனை மக்கள் தண்டிக்கும் காட்சியை காணொளியில் காணலாம்.