ஆவா குழுவின் முக்கியஸ்தர் மானிப்பாயில் கைது

ஆவா குழுவின் முக்கியஸ்தர் மானிப்பாயில் கைது.

ஆவா குழுவின் முக்கியஸ்தர்

யாழ்ப்பாணம், ஆவா குழுவின் முக்கியஸ்தர் ஒருவரை மானிப்பாய் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

சுதுமலை அம்மன் கோவிலுக்கு அருகாமையில் வைத்து இன்று  (23.11) காலை மானிப்பாய் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

சின்னா என அழைக்கப்பட்ட ரவிகிருஸ்ணா (வயது 23) என்ற இளைஞரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்றும், ஆவா குழுவில் முக்கிய அங்கம் வகித்து வந்தவர் என்றும் மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட இவரை பொலிஸ் விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றதாகவும் மானிப்பாய் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.