ஆள் அடையாள அட்டை இன்றேல் வாக்குச் சாவடிக்குள் பிரவேசிக்க முடியாது

ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு அங்கீகரிக்கப்பட்ட அட்டைகள் எதுவும் இல்லாத எவரும் வாக்குச் சாவடிக்குள் பிரவேசிக்க இடமளிக்கப்பட மாட்டார்கள் என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

வேட்பு மனுக்களில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள 10 வீதமானவர்களுக்கு தகுதியான அடையாள அட்டைகள் இல்லையெனவும், இவ்வாறானவர்களுக்கு வாக்குச் சாவடிக்குள்ளோ, வாக்கு எண்ணும் நிலையத்துக்குள்ளோ பிரவேசிக்க இடமளிக்கப்பட மாட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]