ஆள்மாறாட்டம் செய்தவர் கைது

ஆள்மாறாட்டம் செய்தவர் கைது

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரிட்சையில் ஆள்மாராட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பிலியந்தலை பகுதி பாடசாலை ஒன்றிலேயே இந்த ஆள்மாறாட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அவர் கூறினார்.

மாணவன் ஒருவரின் அடையாள அட்டையில் இருந்த புகைப்படத்துக்கு மேலாக சந்தேகநபர் தனது புகைப்படத்தை ஒட்டி, அதனை லெமினேட் செய்து, பரீட்சை மண்டபத்தில் சமர்ப்பித்துள்ளார்.

குறித்த இருவரும் நண்பர்கள் எனத் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் கூறினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]