குடி போதையில் வாகனம் ஓட்டுவோருக்கு ஒரு கெட்ட செய்தி

பொலிஸ் திணைக்களம் இன்று கொழும்பில் உள்ள கொழும்பு போக்குவரத்து பொலிஸ் தலைமையகம் உட்பட நாடெங்கிலும் உள்ள 42 கண்காணிப்பு பிரிவினரிடையே 90,000  ஆல்கஹால் சோதனை அலகுகளை விநியோகம் செய்தது. (ஆல்கஹால் சோதனை)

ஆல்கஹால் சோதனை

பொலிஸ் பேச்சாளர் SP ருவன் குணசேகர நேற்று செய்தி ஊடகத்திடம் தெரிவித்தபோது, ஒவ்வொரு பொலிஸ் நிலையத்திற்கும் இந்த அலகுகள் வழங்கப்படவுள்ளதாகவும் , குடிபோதையில் உள்ள ஓட்டுனர்கள் மீதான
சோதனை வரவிருக்கும் நாட்களில் தீவிரமடையும் என்று தெரிவித்தார் .

இத்தகைய சோதனைகளை தீவிரப்படுத்துவதன் மூலம் போதையில் வாகனம் செலுத்துவோரின் உரிமத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க நீதிபதி கோரிக்கை விடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார் .

இந்த அலகுகள் பிரித்தானியாவில் இல் இருந்து இறக்குமதி செயப்பட்டவை என குறிப்பிடதக்கது.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]