ஆற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காட்மோர் ஆற்றிலிருந்து பெண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சடலம் இன்று பிற்பகல் மீட்கப்பட்டதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த ஆற்றுப் பகுதியில் சடலமொன்று கிடப்பதை அவதானித்த அப்பகுதி மக்கள், பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

அதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

காட்மோர் தோட்டம், லாட்ஜ்வில் பிரிவைச் சேர்ந்த 69 வயதுடைய சங்குப்பிள்ளை பெரியக்கா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை நேரத்தில் வீட்டில் இருந்து சென்ற நிலையில், இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணகளிலிருந்து தெரியவந்துள்ளது.
Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]