ஆறு வான் கதவுகள் திறப்பு

தெதுறுஓயா நீர்த்தேக்கத்தின் ஆறு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தெதுறுஓயா நீர்த்தேக்கத்தின் ஆறு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக சிலாபம், பள்ளம மற்றும் ஆராய்ச்சிக்கட்டுவ பகுதியில் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறு அந்த நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, உடவளவை நீர்த்தேக்கத்தின் ஐந்து வான் கதவுகள் நேற்று இரவு திறக்கப்பட்டிருந்தன.

அத்துடன், கலாவௌ நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகளும் நேற்றைய தினம் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]