ஆறு பிரதியமைச்சர்கள் இன்று பதவியேற்பு

ஆறு பிரதியமைச்சர்கள் மற்றும் இரண்டு இராஜாங்க அமைச்சர்கள் இன்று காலை, ஜனாதிபதி செயலகத்தில் வைத்து பதவியேற்கவுள்ளனர்.

முன்னதாக, ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆறு பேர் பிரதி அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியிருச்தது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் அலுவிகார, புத்திக பத்திரன, அஜித் மன்னம்பெரும, எட்வேர்ட் குணசேகர, லக்கி ஜெயவர்த்தன, நளின் பண்டார ஆகியோரே பிரதி அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை, முன்னாள் நிதி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாக கூறப்பட்டது.

கடந்த செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையில் நடந்த பேச்சுக்களின் போது இதற்கு இணக்கம் காணப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

எனினும், ரவி கருணாநாயக்கவுக்கு இன்று அமைச்சர் பதவி வழங்கப்படுவது பற்றிய எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]