தோல்வி தெரியுபோது பயமும் சேர்ந்துகொள்ளும் – தொண்டமான்

“மனிதருக்கு பயம்வந்தால் எதை வேண்டுமானாலும் கூறுவார்கள். அதேபோல், தோல்வி கண்கங்களுக்கு தெரியும் போது தானாகவே பயமும் சேர்ந்து தெரியும்” என, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் எம்.பி தெரிவித்தார் .

ஹட்டன் ஆரியகம பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனை கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், “எதிர்வரும் 10ஆம் திகதிக்கு பிறகு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஹட்டன் – டிக்கோயா நகரசபையை கைபற்றியவுடன் வீதி புனரமைப்பு மற்றும் ஹட்டன் நகரில் குவிந்து கிடக்கும் குப்பை பிரச்சினைகளுக்கு தீர்வு.

அத்துடன், முன்பள்ளி பாடசாலைகளுக்கான வாகனதரிப்பிடங்களை அமைக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

இலங்கை தொழிலாளர் காங்கிரசை பொறுத்தவரையில் சொல்லுவதைதான் செய்யும் செய்வதைதான் சொல்லும். இம்முறை சபைகளை கைபற்றியவுடன் இந்த பிரதேசத்தில் வாழுகின்ற தமிழ், சிங்களம், முஸ்லிம் மக்களுக்கான மூன்று உறுப்பினர்களை தெரிவுசெய்து அனைத்து மக்களுக்கான விடயங்களையும் பெற்று கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளபடும்.

தற்பொழுது முன்னெடுக்கபடுகின்ற அபிவிருத்தித் திட்டங்கள் மூவின மக்களையும் சென்றடைவதில்லை” என்றார்.

இந்த மக்கள் சந்திப்பில், நுவரெலியா மாவட்ட முன்னாள் எம்.பி. பி.ராஜதுறை, மத்திய மாகாண அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]